Monday, May 10, 2010

வரங்கள்

வேண்டும் வரங்கள்...

ஜன்னலோர படுக்கை.
தினம் தினம் பவுர்ணமி.
நொடியில் மழை.
கடியில் சொர்கம்.

சாலையோர பூக்கள்.
அதிகாலை பனித்துளி.
சூரியனின் இறுதி சிமிட்டல்.
இரவுநேர மெல்லிசை

கள்ளமில்லா சிரிப்பு.
பொய்யில்லா நட்பு.
தினம் நூறு கவிதைகள்.
மீண்டுமொரு பாரதி.

தோள் சாய தோழன்.
தலைகோத காதலி.
தாய்மடித் தூக்கம் .
தூக்கத்தில் மரணம்.

இவையாவும் எதிபார்காத மனசு.