Thursday, April 21, 2011

வீரா

தமிழா டே தமிழா!
சோம்பல் ஒளிந்து தோன்றிடு தமிழா!

வீர தமிழ் மண்ணில் வளர்ந்த தமிழா உலகமே உனது கரங்களிலடா!
விண்ணைத்தாண்டி பிறந்த மன்னைதாண்டி ஆழ கடலை தாண்டி பெருமை தெடிடுடா!

வறுமை, வலிமை, கொடுமை, கடமை 
உன்னை தளர்ந்தாலும் நீ வெற்றி நடை போட்டு அவற்றை நீ எதிர்க்கவேண்டுமடா!

வஞ்சகம் நிறைந்த வாலிப வயது உன்னை ஆட்டி படைக்கிறது வலிக்கிறத?
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் மனதில் உறுதியோடு போரிடுடா!


இரத்தத்தில் பொங்கும் நமது இனத்தின் வீரம்!
வேகத்தில் குறையாத நமது விவேகம்!

தமிழனே நில்!
தமிழுடன் செல்!

பாரத புதல்வனே பயத்தினை வேல்!

 அச்சமில்லை அச்சமில்லை அச்சம் எனபதில்லையே!
கத்தியை தீட்டா கணம் புத்தியை தீட்கின்ற தமிழனுக்கு என்றும் அச்சமில்லையே!

வெற்றியுடன் சென்றுவா தமிழா!
இறைவன் துணை நமக்கு என்றென்றும் தமிழா!

தமிழா! டே தமிழா!
அகரம் வெடித்து தோன்றிடு தமிழா!











நம்மக்குள் இருக்கும் தமிழை வளர்ப்போம்.
நம்மை சுற்றியிருக்கும் தமிழ் நம்மை வாழவைக்கும்.


-இப்படிக்கு உங்கள் அன்பு தமிழன், 
க. பத்மநாதன்.

No comments:

Post a Comment